#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.. கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட இளைஞர்.. கொலை செய்ய முயன்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிங்கராயப்பன். இவர் கோவிலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிங்கராயப்பன் திருக்கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக மாற்றித் தருவார் என்று கூறி தனது உறவினர்களிடமிருந்து ரூபாய் 90 ஆயிரத்தை வாங்கி அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஆரோக்கியராஜ் அந்த பணத்தை திருப்பி தரவில்லை. மேலும் ஆரோக்கியராஜ் அதே பகுதியில் ஆர்வோ வாட்டர் சர்வீஸ் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது கடைக்கு சென்ற சிங்கராயப்பன் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவரது கடையிலிருந்து ஆரோக்கியராஜின் அண்ணன் சின்னப்பன் என்பவருக்கும் சிங்கராயப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்துள்ளது.
இந்த தகராறில் ஆரோக்கியராஜ், சின்னப்பன் உட்பட ஆறு பேர் சேர்ந்த கும்பல் சிங்கராயப்பனை சரமாரியாக தாக்கியத்தோடு மட்டுமல்லாமல் கத்தியால் அவரது தலை மற்றும் கைகளில் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிங்கராயப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சிங்கராயப்பன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆரோக்கியராஜ், சின்னப்பன் உட்பட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.