திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திக். திக்..நிமிடங்கள்.. ஓடும் இரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. சக பயணிகளால் பார்க்கப்பட்ட பிரசவம்.. என்ன குழந்தை பிறந்தது தெரியுமா.?
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா தனது உறவினர்களோடு சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு வேண்டுதல் நிறைவேற்ற சென்றுள்ளார்.
இதனையடுத்து கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு கல்பனா மற்றும் அவரது உறவினர்கள் திண்டுக்கல் திரும்பி வர கேரளா எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது இரயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் வலியில் துடித்து கொண்டிருந்த கல்பணாவிற்கு பிரசவம் பார்க்க இரயிலில் யாரேனும் மருத்துவர்கள் உள்ளனரா என்று தேடி உள்ளனர். ஆனால் அப்படி யாருமில்லாத நிலையில் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதனையடுத்து ஓடும் இரயிலில் கல்பனாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் கல்பனாவின் குடும்பத்தினர் பிரசவ வலி குறித்து காட்பாடி இரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இரயில் காட்பாடி இரயில் நிலையத்திற்கு வருவதற்குள் அங்கு மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் மற்றும் காட்பாடி ரயில்வே
போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இரயில் காட்பாடி வந்ததும் ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு கல்பனாவை பரிசோதித்த மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.ஓடும் இரயிலில் சக பயணிகளால் பெண்ணுக்கு பிரசவமாகி நல்முடன் குழந்தை பிறந்த சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.