#Breaking: பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்.. திருமாவளவன் கண்டனம்.. பேட்டி உள்ளே.!

ஊழலுக்கு எதிரான போராட்டம் சரி எனினும், அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் விதமாக செயல்பட்டால், அது சரியல்ல என விசிக தலைவர் கூறினார்.
தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை கிளப்பி இருக்கும் நிலையில், ஆளும் திமுக அரசு மௌனம் காக்கிறது. மேலும், ஊழலே நடைபெறாத இடத்தில் அமலாக்கத்துறை ஊழல் நடந்ததாக கூறி அவதூறு பரப்புகிறது என துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார்.
ஊழல் தொடர்பான விசயத்துக்கு பொறுப்பேற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக தரப்பு போரட்டம் முன்னெடுத்து இருக்கிறது. இன்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது. போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர், அவர்களின் வீட்டிலேயே கைது செய்யப்பட்டனர். மேலும், எழும்பூரில் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #JustIN: தென்மாவட்டத்தில் ஜாதிய கொலைகள் அதிகரிப்பு - விசிக திருமாவளவன் பேட்டி.!
திருமாவளவன் பேட்டி
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் எம்.பி திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கையில், "டாஸ்மாக் ஊழல் விஷயத்தில், ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை பாஜகவை வரவேற்கிறது. சட்டம்-ஒழுங்கு காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கலாம். மது முற்றிலும் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. அதற்காக குரல் கொடுப்போரை நாங்கள் வரவேற்கிறோம்.
வாக்குறுதியை திமுக அரசு செயல்படுத்த வேண்டும்
ஆனால், அவர்கள் அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் விதமாக செயல்பட்டால், அது சரியல்ல. பாஜக ஆளும் மாநிலத்திலும், மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதனை நாம் பாராட்டலாம். நாங்கள் கூட்டணி கட்சியாக இருந்தாலும், தோழமையுடன் இருந்தாலும், வாக்குறுதியில் கொடுத்தபடி திமுக அரசு மது ஒழிப்பு கொள்கையை செயல்படுத்த வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விசிக நிர்வாகி கைது.!