அச்சச்சோ.. பஸ்ஸ நிறுத்துங்க.. மூச்சிரைக்க பரிதாபமாக ஓடிய சிறுமி.. பதற வைக்கும் வீடியோ.!



thirupathur 12th girl chasing govt bus for board exam

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பகுதியில் பிளஸ் டூ படிக்கும் ஒரு மாணவி பள்ளிக்குச் செல்ல காத்திருந்து இருக்கிறார். அப்போது, அந்த வழியே சென்ற அரசு பேருந்து அந்த மாணவியை ஏற்றாமல் சென்றுள்ளது. 

அப்போது, அதிர்ச்சியடைந்த மாணவி பரிட்சையை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பேருந்தை துரத்திக் கொண்டு பின்னாலையே ஓடுகிறார். அவர் நீண்ட தூரம் ஓடிய பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு செல்கிறார்.


இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு கடும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றது. மேலும், அரசு போக்குவரத்து கழகம் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன் அந்த ஓட்டுநர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 44 பயணிகள் உயிர் தப்பியது.. ஓட்டுனருக்கு திடீர் தலைசுற்றல்.. மசினகுடி மலையில் பீதியான பயணிகள்.!

இதையும் படிங்க: பாலத்தில் ஜெட் போல பயங்கர வேகம்.. நொடியில் நடந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!