மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் காதலியிடம் நள்ளிரவில் அத்துமீற முயன்ற துயரம்; துரோகியாக நண்பனை கழுத்தறுத்து கொன்று புதைத்த பயங்கரம்.!
ஜெயிலில் பழக்கமான நண்பனை நம்பி காதலியை ஓரிரவு வீட்டில் தங்கவைக்க முயற்சித்த காதலனுக்கு நண்பன் துரோகியாக துணிந்ததால் இறுதியில் காதல் மன்னவன் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களில் பேட்டரி தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர், குற்றத்தில் ஈடுபட்ட விஜி என்ற இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்திவிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல தயாராக இருந்துள்ளனர்.
அப்போது, விஜி தான் ஒருவரை கொலை செய்து உடலை புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட காவல் துறையினர் விஜியை நேரடியாக கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில், ஆணின் சடலம் மீட்கப்பட்டது. அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விஜியிடம் நடத்திய விசாரணையில், "கும்மிடிபூண்டி நாகராஜா கண்டிகையை சேர்ந்தவர் லெனின். இவரின் மீது கொலை, அடிதடி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன. இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டபோது, திருட்டு வழக்கில் கைதான ஒடிசாவை சேர்ந்த அஜித் குமாருடன் லெனினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து முன்ஜாமீனில் வெளிவந்த இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து நட்பை வளர்த்துள்ளனர். இதற்கிடையில் லெனினிற்கும் - கும்மடிபூண்டியில் வசித்து வந்த வடமாநில பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. காதலியை நண்பனான அஜித் குமாரிடம் அறிமுகம் செய்து, அவரை 2 நாட்கள் உனது வீட்டில் தங்கவைத்துக்கொள் என்று கூறியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட அஜித் குமார், நள்ளிரவு நேரத்தில் நண்பனின் காதலியிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். இந்த தகவலை அறிந்த லெனினின், தனது பழைய கூட்டாளியான விஜி உதவியுடன் அஜித் குமாருக்கு மதுபானம் வாங்கி ஊற்றிவிட்டு கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
இதன்பின்னர், திருட்டு வழக்கில் கைதான விஜி, தான் கொலை செய்துள்ளதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து லெனினையும் சிக்க வைத்துள்ளார். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.