திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீன்பிடிக்க சென்றவர் ஏரியில் தவறி விழுந்து பரிதாப பலி.. திருவள்ளூர் அருகே சோகம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொளுந்தலூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 30). இவர் மீன் பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை மீன் பிடிக்க பூண்டி ஏரிக்கு படகில் சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது உறவினர்களுடன் ஏரிக்கு வந்து பார்த்த போது, விஜயனின் படகு மட்டும் இருந்துள்ளது. அவர் காணவில்லை. இதனால் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் அவரின் உடலை தேடும் பணியில் ஈடுப்பட்ட நிலையில், இன்று காளை நேரத்தில் ஏரிக்குள் இருந்த சேற்றில் சிக்கி உயிரிழந்த விஜயனின் உடல் மீட்கப்பட்டது. மேலும், மீன் பிடித்தபோது விஜயன் தவறி விழுந்து சேற்றில் சிக்கி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.