53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#சற்றுமுன்: தனியார் சொகுசு பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.!
லாரி - சொகுசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, தச்சூர் கூட்டுசாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து, லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தனர்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலும் சீர் செய்யப்பட்டது.