மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீலர்ஷிப் தருவதாக ரூ.17 இலட்சம் மோசடி செய்த தம்பதி கைது.. அதிரடி சம்பவம்.!
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி, உன்னிகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரின் மனைவி பாண்டிய லட்சுமி. இருவரும் கரையான் சாவடியில் பைக் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் மின்சார மோட்டார் பைக்கின் தூத்துக்குடி மாவட்ட டீலர்சிப்பை பெறுவதற்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவர் பெற முயற்சி எடுத்துள்ளார்.
அவருக்கு டீலர்ஷிப் கொடுக்க ரூ.25 இலட்சம் பணமும் கேட்ட நிலையில், எட்வினும் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற தம்பதி டீலர்ஷிப் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் எட்வின் பணத்தை திருப்பி கேட்கவே, முதலில் ரூ.8 இலட்சம் பணத்தை கொடுத்தவர்கள் மீதமுள்ள ரூ.17 லட்சத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, எட்வின் பூந்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.