மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் தகராறு.. வடமாநில லாரி ஓட்டுநர் பயங்கர செயல்.. 2 பேர் கொலை., தமிழகமே அதிர்ச்சி.!
மது போதையில் தன்னிடம் தகராறு செய்தவர்கள் மீது வடமாநில ஓட்டுநர் லாரி ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரி பார்க்கிங் இயங்கி வருகிறது. அங்கு அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகிய மூவரும் நேற்றிரவு மது அருந்திக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் வடமாநில லாரி டிரைவர் ஒருவர் தனது லாரியை எடுக்க முயற்சித்த போது, மது போதையில் இருந்த மூவரும் வடமாநில லாரி டிரைவருடன் தகராறு செய்துள்ளனர்.
அப்போது தகராறு வாக்குவாதமாக முற்றி மதுபோதையில் இருந்த மூவரும், லாரியின் கண்ணாடியை தாக்கியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த லாரி ஓட்டுநர் மூவர் மீதும் லாரி ஏற்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் கமலகண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பலத்த காயங்களுடன் இருந்த குமரன் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், குமரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது நவீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை தொடர்ந்து, செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தப்பியோடிய வடமாநில லாரி ஓட்டுநர் மற்றும் லாரி கிளினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.