மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து, உல்லாசமாக இருந்து பெண்ணை கைவிட்ட திமுக பிரமுகர்.. கம்பி என்ன வைத்த காதலி.!
இளம்பெண்ணை திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றி, ரூ.5 இலட்சம் பறித்த திமுக பிரமுகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மகள் நிவேதா (வயது 23). நிவேதாவின் எதிர்வீட்டில் வசித்து வருபவர் மணி. இவரின் மகன் முருகன். முருகனும் - நிவேதாவும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர். முருகன் பூண்டி திமுக ஒன்றிய தொண்டரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
முருகன் நிவேதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், காதலியை தனிமையில் சந்தித்து ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தன்னை முருகன் திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில், நிவேதாவும் காதலனின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். இந்த நிலையில், முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த நிவேதா காதலனிடம் கேட்கையில், வீட்டில் பெற்றோர் என்னை கட்டாயப்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 7 ஆம் தேதி எனக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் என்றும் கூறியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த நிவேதா, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் கண்காணிப்பாளர் திருத்தணி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவே, திருத்தணி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நிவேதாவின் குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து, முருகனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.