மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் 18 வயது இளம்பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. கதறியழுத பெண்ணின் தந்தை., நடந்த சோகம்.!
18 வயதில் காதலித்து 20 வயது இளைஞனை திருமணம் செய்த பெண்மணி, 4 மாதத்திற்குள் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, அகூர் கிராமத்தில் வசித்து வருபவர் விக்னேஷ் (வயது 20). செருக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாலினி (வயது 18). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மாலினியின் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அகூர் கிராமத்திலேயே இருவரும் வசித்து வந்தனர்.
புதுமண காதல் ஜோடிகளுக்குள் அவ்வப்போது குடும்பம் நடத்துவது தொடர்பாக பிரச்சனை நடந்து வந்துள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த மாலினி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருத்தணி காவல் துறையினர், மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாலினியின் தந்தை தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
திருமணம் நடந்து 4 மாதங்களுக்குள் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட காரணத்தால், வட்டாட்சியர் தலைமையிலான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.