மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டு வாசலில் காத்திருந்த எமன்; தூக்க கலக்கத்திலேயே பறிபோன பெண்ணின் உயிர்.! மழைநேரத்தில் கவனம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், புதூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் தெருவிளக்கு மின்கம்பத்தில் இருந்த மின் இணைப்பு கம்பி அறுந்து விழுந்ததாக தெரிய வருகிறது.
இதனால் வீட்டின் வாசலிலேயே மின்கம்பி கிடந்த நிலையில், இரவில் உறங்கி, அதிகாலை நேரத்தில் தூக்கத்திலேயே வீட்டிற்கு வெளியே வந்த கனகா என்ற பெண்மணி மின் கம்பியை மிதித்துள்ளார்.
மின்சாரத்தால் தாக்கப்பட்ட அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். அவரின் சத்தம் கேட்டு வந்தால் அக்கம் பக்கத்தினர், உடனடியாக மின்வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால், மின் இணைப்பு விரைந்து துண்டிக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகரிகளிலும் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர்.
மழைக்காலங்களில் மின்சார வயர்கள் திடீர் காற்றின் காரணமாக அறுந்து விழும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், இரவு வேளைகளில் நடக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.