மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது கிழவன் போக்ஸோவில் கைது..!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி மேலநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வேலாயுதம் (வயது 70). அப்பகுதியில் சகோதரர்களுடன் சேர்ந்து கயிறு தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
இங்கு வட மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி, தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் இங்கு தங்கியிருக்கிறார்.
கடந்த மாதம் ஏழாம் தேதி சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மருத்துவர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகித்துள்ளனர்.
இதுகுறித்து திருமக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வேலாயுதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அதிகாரிகள் வேலாயுதத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.