மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வறுமையிலும் தெளிவு.. 20 மாணவர்களுக்கு கல்விக்கண் தந்த வலங்கைமான் பிரியதர்ஷினி.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான், அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பிரியதர்ஷினி. இவரின் குடும்பம் வறுமையில் சிக்கி தவித்த நேரத்தில், தாய் மற்றும் தந்தை வேளிருக்கு சென்று வேலைபார்த்து கடனை அடைத்து வந்துள்ளனர்.
இதனால் பிரியதர்ஷினி தனது தம்பியுடன் பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளார். அவரின் 13 வயது இருக்கும்போதே, குடும்பத்தின் அவல நிலையை உணர்ந்து வேளைக்கு சென்றுள்ளார். பின்னர், அவரின் பெரியம்மா மற்றும் பெரியம்மா மகனின் அறிவுறுத்தலின் பேரில் வேலைக்கு செல்லாமல் படிக்கச் சென்றுள்ளார்.
மேலும், அப்போது குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான புரிதலும் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் சக தோழிகள் பக்கபலமாக இருந்து உதவி செய்துள்ளனர். பிரியதர்ஷினி தன்னைப்போல எத்துணை மாணவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணியுள்ளார்.
இதனையடுத்து, பள்ளியில் பயின்று வறுமையால் இடையில் நின்ற மன்னர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து பேசி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வைத்துள்ளார். இவ்வாறாக 20 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர வழிவகை செய்துள்ளார். மேலும், விரைவில் நான் வழக்கறிஞராக பணி செய்வேன் என்றும் பிரியதர்ஷினி தெரிவித்தார்.