மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை காதலித்ததால் துயரம்.. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பஞ்சாயத்தால் இளைஞர் தற்கொலை..! திருவாரூரில் சோகம்.!
17 வயதுடைய சிறுமிக்கு காதல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்து, காவல் நிலையத்தில் நடந்த கண்டிப்பால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரோனாச்சேரி, மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி ராதா. இவர்களின் மகன் ராகுல் ராஜ் (வயது 22). இளைஞர் ராகுல் ராஜ் அப்பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தார், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் தொல்லை தொடர்பான புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் ராகுல் ராஜை நேரில் அழைத்து கண்டித்து இருக்கின்றனர்.
மேலும், அவரை அரை நிர்வாணப்படுத்தி காவல் ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் அடித்து அவமானப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. இதனால் மனமுடைந்துபோன ராகுல் ராஜ், வீட்டில் இரவு நேரத்தில் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகனின் இறப்பை அறிந்த பெற்றோர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை செய்ய உத்தரவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.