மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கலோ பொங்கல்....! தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு இதுவா....!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து நியாயவிலை கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
இதன்படி இந்த முறை பரிசு பொருள்கள் எதுவும் தராமல் அதற்கு மாற்றாக எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.