மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 4 பேர் பரிதாப பலி.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, துறையூர் பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் தொழிலில் பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படவே, பட்டாசு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.