மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: தமிழகமே அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த இளம் ஜோடி, தாலி ஈரம் காய்வதற்குள் ஆணவப்படுகொலை.. தூத்துக்குடியில் வெறிச்செயல்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முருகேசன் நகரில் வசித்து வருபவர் மாரிச்செல்வம். இவரின் மனைவி கார்த்திகா.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் எனினும், எதிர்ப்பு காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், காதல் திருமணம் செய்த தம்பதி, வீடுபுகுந்து இன்று வெட்டிபடுகொலை செய்யப்பட்டது. கார்த்திகாவின் உறவினர்கள் கொலையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் காதல் திருமணம் செய்ததால் எதிர்ப்பு தெரிவித்து ஆணவக்கொலை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்படி தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.