மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் அலட்சியத்தால் சோகம்; தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை பரிதாப பலி.!
நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் கோபிசிங். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், உடையார்பாளையம் பகுதியில் பிரவீன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது தனது மனைவி, மகளுடன் குடும்பத்தோடு தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கோபிசிங்கின் மனைவி குளித்து கொண்டிருந்த நிலையில். அவரது மகள் ஆயிஷா எதிர்பாராதவிதமாக அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.
இதனை கவனிக்காத பெண்மணி குளித்துவிட்டு குழந்தையை பார்த்தபோது, அது நீருக்குள் உயிருக்கு போராடியுள்ளது. குழந்தையை மீட்ட பெண்மணி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.