மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் சப்ளை... 8 பேர் கும்பல் கைது.. திரைப்பட பாணியில் பரபரப்பு சம்பவம்.!
விளாத்திகுளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள் 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், வேம்பார் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில், மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கியூ பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில், கரையில் நிறுத்தப்பட்டு இருந்த நாட்டுப்படகு அதிவேகத்துடன் கடலில் பயணம் செய்துள்ளது.
உஷாரான காவல் துறையினர் கடத்தல் கும்பல் என்பதை உறுதி செய்து, விசைப்படகு மூலமாக நாட்டுப்படகை துரத்தி பிடித்தனர். படகில் நடந்த சோதனையில் 10 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது அம்பலமானது.
மேலும், படகில் பயணித்த 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சித்தும் அம்பலமானது.