3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பள்ளியில் சூறையாடிய பொருட்களை இரவோடு இரவாக வீசி விட்டு சென்ற ஜென்டில் மேன்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கடந்த கடந்த 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்த பள்ளிவின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மேலும், பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீக்கிரையாகின. இந்த நிலையில் அந்த பள்ளியின் உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் இருந்து ஏராளமான பொருட்களை தூக்கிச் சென்றனர். வாட்டர் ப்யூரிஃபையர், கிரைண்டர், மேஜை நாற்காலிகள், எரிவாயு சிலிண்டர்கள் ,சமையல் பாத்திரங்கள், ஃபேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை யடுத்து, பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தண்டோரா போட்டு காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று, தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை பள்ளியின் அருகே சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர் .
அவற்றில் மேசைகள், நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் , எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அங்கேயுள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இரவோடு இரவாக வந்து அவற்றை வீசிவிட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.