மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நெல்லை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட குழந்தை உடலில் காயத்துடன் மீட்பு.. அதிரவைக்கும் தகவல்.. பதறும் பெற்றோர்.!!
பள்ளிவாசலில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை திருச்செந்தூர் அருகே மீட்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு காவல் துறையினர் தொடர் வலைவீசியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரை சார்ந்தவர் சாகுல் ஹமீது. இவரின் மனைவி நாகூர்மீரான். தம்பதிகள் இருவரும் தங்களது 2 வயது பெண் குழந்தையுடன் திருநெல்வேலியில் உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவு குழந்தையுடன் பள்ளிவாசல் வளாகத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில், குழந்தை காலை எழுந்து பார்க்கும் போது மாயமாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்கையில் 2 மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் குழந்தையை கடத்தி சென்றது அம்பலமானது. அவர்களை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி பள்ளிவாசலில் மாயமான குழந்தை திருச்செந்தூரில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், காவல் துறையினர் குழந்தையை மீட்டுள்ளனர். திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனை அருகே குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது.
குழந்தையின் கன்னம் மற்றும் காதுகளில் லேசான காயம் இருப்பதால், குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேற்படி அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், குழந்தையை கடத்தி சென்ற 2 மர்ம நபர்களுக்கும் அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.