#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊராட்சிமன்ற தலைவியின் வீட்டில் கைவைத்த திருட்டுக்கும்பல்.. கதவை திறந்த குடும்பத்துக்கே ஷாக் சம்பவம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, மறுகால்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் செல்லையா (வயது 62). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். செல்லையாவின் மனைவி சாந்தகுமாரி (வந்து 56). இவர் மறுகால்குறிச்சி ஊராட்சிமன்ற தலைவி ஆவார். தம்பதிகளுக்கு நாங்குநேரி தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் பண்ணை வீட்டிற்கு சென்ற செல்லையா அங்கேயே தங்கிவிட்டார். தோட்டத்தில் இருந்து நேற்று அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டின் முன்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.5 இலட்சம் பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிற பொருட்கள் திருடப்பட்டு இருந்தது உறுதியானது.
இதனையடுத்து, சாந்தகுமாரி நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நிகழ்விடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.