மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 3 வயது சிறுவன் கொடூர கொலை; குடும்ப தகராறில் பெண் வெறிச்செயல்.. நெல்லையில் பயங்கரம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், ஆத்துக்குறிச்சி கிராமத்தில் பெற்றோருடன் 3 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் இன்று காலை 9 மணிக்கு மேல், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனிடையே, சிறுவன் திடீரென மாயமாகி இருக்கிறார்.
இதனால் பதறிப்போன சிறுவனின் தந்தை, காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவனின் சடலம், சிறுவனின் எதிர்வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.
சிறுவனை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்தவாறு சடலம் மீட்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி தங்கம் என்ற பெண்மணியை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: சொத்துக்காக இப்படியா? தந்தை, தங்கை கொடூரமாக கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!
மேற்படி விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அதற்கு பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 60 வயதில் தேவையா இதெல்லாம்?.. திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்; கிழவனின் கதைமுடித்த கணவன்.!