மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படிக்கட்டில் பயணம்.. பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்மணி.!
அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்மணியொருவர் படுகாயமடைந்த சோகம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், சமூகரெங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி. இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மகன்கள் வள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்கள்.
இதனால் தினமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் மகன்களை பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், இன்று காலையும் வழக்கம்போல சமூகரெங்கபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
சமூகரெங்கபுரம் ஊரின் மேற்குப்புறத்தில் உள்ள வளைவில் பேருந்து சென்றுகொண்டு இருக்கையில், பேருந்தின் முன்வாசல் அருகே நின்று பயணம் செய்த சுந்தரி, பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்ட அதிகாரிகள், நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக ராதாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.