மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் போதையில் தொந்தரவு செய்த கணவன்; உணவில் விஷம் வைத்து கொலை செய்த மனைவி.!
குடிக்கு அடிமையான கணவன் தினமும் போதையில் தொந்தரவு செய்து வந்தால், மனைவி மனமுடைந்து கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி, குஞ்சன்விளை கிராமத்தில் வசித்து வருபவர் சிங்காரவேலன் (வயது 41). மனைவி ஜெயக்கொடி (வயது 40). தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மினி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த சிங்காரவேலன், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே பொழுதை கழித்து வந்துள்ளார்.
ஜெயக்கொடி ஓலை பின்னி வரும் வேலை பார்த்து வருவதால், அவரின் வருமானத்தில் குடும்பம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுபோதைக்கு அடிமையான சிங்காரவேலன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 24ம் தேதி திசையன்விளை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் பேனரை போதையில் சிங்காரவேலன் சேதப்படுத்திட, இதுகுறித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், குடும்பத்தினர் முயற்சியில் நிபந்தனை ஜாமீன் வாங்கி கொடுக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த சிங்காரவேலன் மனைவியிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் உணவு சாப்பிட்ட சிங்காரவேலன், வாந்தி-மயக்கம் ஏற்பட்டு வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்துள்ளார். கணவர் உயிரிழந்ததும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மனைவி விறுவிறுப்பாக செய்து வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிங்காரவேலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, சிங்காரவேலன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. தினமும் மதுபோதையில் தகராறு செய்வதோடு தன்னை துன்புறுத்தி வந்ததால், ஒருசமயத்திற்கு மேல் மனத்தளவில் விரக்தியடைந்த ஜெயக்கொடி கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து, ஜெயக்கொடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.