மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுப்பேருந்து ஓட்டுனரின் உதவியால் உயிர்பிழைத்த பெண்: அரசு மருத்துவமனைக்கு விரைந்த பேருந்து.! குவியும் பாராட்டு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இன்று தமிழ்நாடு அரசு பேருந்து பயணித்தது. பேருந்தில் 60 பயணிகள் பயணம் செய்த நிலையில், சூளகிரி அருகே வந்துகொண்டு இருந்தது.
அப்போது, 50 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென மயங்கி இருக்கிறார். இதனால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசர ஊர்தி வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது.
இதனையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் உடனடியாக சூளகிரி அரசு மருத்துவமனைக்கு பயணிகளுடன் பேருந்தை இயக்கினார். அங்கு பெண்மணியை சிகிச்சைக்கு அனுமதித்ததைத்தொடர்ந்து, பேருந்தின் ஓட்டுநர் முருகன் திருப்பத்தூர் நோக்கி வாகனத்தை இயக்க்கினார்.
துரிதமாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.