மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடப்பாரையை வைத்து கணவன் செய்த வெறித்தனத்தால், துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.! பேரதிர்ச்சி சம்பவம்.!!
கோவில் திருவிழாவுக்கு வந்த மனைவியை கணவன் கடப்பாரையால் அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 40). இவர் பெங்களூரில் பில்டிங் கான்ட்ராக்டராக இருக்கிறார். இவரின் மனைவி துர்கா தேவி (வயது 35). தம்பதிகளுக்கு கிருபாகரன் என்ற 15 வயது மகனும், யுவராஜ் என்ற 13 வயது மகனும் உள்ளனர்.
ஆதியூரில் நடைபெறவிருந்த திருவிழாவுக்கு பெருமாள், துர்கா தேவி சென்ற நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து மனைவியின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய துர்கா தேவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாளை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "எனக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இதுகுறித்து இருவருக்கும் இடையே தகராறு வந்த நிலையில், சம்பவத்தன்று அவரை கடப்பாரையால் அடித்து கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.