மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பூசாரி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், கொழுமம் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.
கோவிலுக்கு அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் வந்து சென்ற நிலையில், கடந்த 2021ம் ஆண்டு கோவிலுக்கு வந்த 14 வயது சிறுமியை ஐயப்பன் தன்னுடன் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 16 வயது மகளுடன் வசித்துவந்த கைம்பெண் பலாத்காரம்; உடலெல்லாம் கடித்து கொடூரம்.. கயவனுக்கு மாவுக்கட்டு.!
போக்ஸோ வழக்கில் கைதான ஐயப்பன் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி ஐயப்பனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி வேன் ஓட்டுனருக்கு மாரடைப்பு; நொடியில் 20 மாணவ-மாணவிகளின் உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!