தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பிறப்பு முதல் இறப்பு வரை.. ஒவ்வொரு சான்றிதழுக்கும் இலஞ்சம்..! அரசு அலுவலகத்தின் இலஞ்ச பட்டியல் வெளியீடு.!
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பிற சான்றிதழ்களை பெற கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதன்பின்னரே, அதற்கான நடைமுறைகள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு பயனாளருக்கு தேவையானவை கிடைக்கும். ஆனால், பல்வேறு அரசு அலுவலகங்களில் இலஞ்சம் என்பது தலைவிரித்தாடுகிறது.
இணையவழியில் ஒரு விண்ணப்பம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்தலும், அரசின் நிர்ணய தொகையை விட கூடுதல் தொகைகள் வசூல் செய்யப்படுகிறது. அரசு அதிகாரிகளை எதிர்த்து கேள்வி எழுப்பினால், தனக்கு தேவையானது கிடைக்காது என்பதால் பொதுமக்களும் அவர்கள் கேட்கும் தொகையை பேரமின்றி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள அவிநாசி செம்பியநல்லூர் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில் அதிகாரிகள் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கு வாங்கும் இலஞ்ச தொகையை குறிப்பிட்டு, இதுவே விலை பட்டியல் தேவையில்லாமல் மணியக்கார அம்மாவிடம் சென்று வாக்குவாதம் செய்யாதீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலியன் வாயிலாக அவிநாசி செம்பியநல்லூர் அரசு அலுவலகத்தில் மக்களிடம் ஆயிரக்கணக்கில் இலஞ்சம் வாங்குவது தெளிவாக உறுதியாகிறது. இலஞ்சத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் போலியான புகாரும் காவல் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு சான்றிதழுக்கு குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படுகிறது. அதன் விபரமாவது,
1. பட்டா சிட்டா சான்றிதழ் - ஒரு சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை ரூபாய் ரூ.5,000 அதற்குமேல் அவசரத்திற்கு ஏற்ப தொகை உயர்த்தப்படும்.
2. இறப்பு சான்றிதழ் - இறந்த உடனே பதிவு செய்தால் குறைந்தபட்சம் ரூ.1,000
3. அடங்கல் சான்றிதழ் - ரூ.1,000
4. வாரிசுசான்றிதழ் - ரூ.5,000 (10 வருடம் முதல் 40 வருடம் ஆகிவிட்டால் ரூ.2,000)
5. வருமான வரி சான்றிதழ் - குறைந்தபட்ச தொகைக்கே ரூ.3,000
6. திருமண பதிவு சான்றிதழ் - ரூ.5,000
7. இடம் அளந்து கொடுப்பதற்கு - ஒரு சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை ரூ.10,000 (அதற்குமேல் இருந்தால் ஏக்கருக்கு தலா ரூ.10,000
8. இருப்பிடச் சான்றிதழ் - ரூ.1,000
9. கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் - ரூ.4,000
10. பிறப்பிடச் சான்றிதழ் - ரூ.1,000
11. FMP சான்றிதழ் - ரூ.1,000 (அவசரம் என்றால் ரூ.7,000).
ஏற்கனவே அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும் விவகாரத்தில் நீதிமன்றமே பிரபு முதல் இறப்பு வரை தனிமனிதன் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்த நிலையில், அரசின் விலைப்பட்டியல் போல இலஞ்ச பட்டியல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.