Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
பயணியின் அலட்சியத்தால் பரிதாபம்.. ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்து டயரில் சிக்கி பலியான சோகம்.!
பேருந்தில் ஏற சென்ற பயணி பேருந்தின் சக்கரத்திலேயே சிக்கிய பலியான சோகம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (வயது 53). இவர் தனது கிராமத்திலிருந்து செய்யாறு பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சென்னை செல்ல முற்பட்டுள்ளர்.
அப்போது, சென்னை செல்லவிருந்த வழித்தடம் 130 கொண்ட பேருந்தில் ஏற முயற்சித்தார். அந்த சமயத்தில் பேருந்தில் பயணி ஏறுவதை கவனிக்காமல் பேருந்து ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கிவிடவே, கால் தவறிய பாண்டியன் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாண்டியனின் மனைவி காமாட்சிக்கு தகவல் தெரிவிக்கப்படவே, மருத்துவமனைக்கு வந்து கணவரின் உடலை பார்த்த கதறி அழுத அவர், இது குறித்து செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.