திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முக்கியப்புள்ளியின் காலில் விழுந்த அதிமுக எம்.எல்.ஏ: அதிர்ச்சியான தொண்டர்கள்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி சண்முகம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
அப்போது, சண்முகம் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் சேவூர் இராமச்சந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நிகழ்வுக்கு வருகைதந்த எம்.எல்.ஏ சேவூர் இராமச்சந்திரன், மரியாதை நிமித்தமாக ஏ.சி சண்முகத்திற்கு சால்வை அணிவித்து கால்களில் விழுந்து ஆசிபெற்றுக்கொண்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிமுக தொண்டர்கள் திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.