ரூ.15 இலட்சம் வேணுமாம்.. PCR சட்டத்தை வைத்து பஞ்சாயத்து செய்த கவுன்சிலர்.. டி.எஸ்.பி-யின் அதிர்ச்சி வீடியோ.. செங்கத்தில் சம்பவம்.!



Tiruvannamalai Chengam Man Intimation Trap of PCR Act

 

தன்னிடம் வேலைபார்த்த தொழிலாளிக்கு விபத்து ஏற்பட்டதும், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவோடு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்த உரிமையாளரிடம் பி.சி.ஆர் சட்டத்தை வைத்து ரூ.15 இலட்சம் பணம் பறிக்க முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், தலவநாயக்கன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜவஹர். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜவஹரின் மகன் ராஜேஷ் குமார். இவர் அப்பகுதியில் திருமண மண்டபம், தேங்காய் மண்டி போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த செப். மாதம் 25ம் தேதி ராஜேஷின் திருமண மண்டபத்தில் பணியாற்றி வந்த குமார் என்பவர் தேங்காய் மட்டை உரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, அவரது கை விரல்கள் துண்டாகியுள்ளன. அவரை மீட்ட ஜவஹர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி செய்து, ரூ.1 இலட்சம் செலவுக்கு பணமும் கொடுத்துள்ளார். 

அதுமட்டுமல்லாது, சென்னையில் உள்ள எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, அவை நிறைவு பெற்றதும் வீட்டிற்கும் அழைத்து வந்து பத்திரமாக சேர்த்துள்ளனர். இதனையடுத்து, அக். 8ம் தேதி குமார் தன்னுடன் சிலரை உறவினர்கள் என ஜவஹரின் வீட்டிற்கு அழைத்து சென்று இழப்பீடு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். 

அவர்களுக்கு பணம் கொடுக்க ராஜேஷ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பு ராஜேஷ் மற்றும் அவரின் தந்தை ஜவஹர் ஆகியோர் குமாரை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (PCR) கீழ் வழக்குபதிய செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 

Tiruvannamalai

இந்த புகாரின் பேரில் செங்கம் காவல் துறையினர் ஒருமாதம் கழித்து பி.சி.ஆர் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இடைப்பட்ட ஒரு மாதத்தில் செங்கம் டி.எஸ்.பி சின்ராஜ் கவனத்தில் வழக்கு சென்றபோது, அவர் ரூ.15 இலட்சம் எதிர்பார்ப்பு கேட்பதாக பேசிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில் செங்கம் எஸ்.பி, "அவர்கள் கொடுத்தது பொய்யான வழக்கு என எனக்கு தெரியும். 

ஆனால், எதிர்தரப்பு நபர்களுக்கு ஆதரவாகவே வழக்கு பதியப்படும். இந்த வழக்கு கொலை வழக்கை விட மோசமானது" என்று கூறுகிறார். டி.எஸ்.பி-யின் அறிவுரைப்படி கவுன்சிலரை பார்க்க சென்றபோது, அவரோ ரூ.15 இலட்சம் பணம் கொடுத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதை போல பணம் கேட்டு இருக்கிறார். 

டி.எஸ்.பி & கவுன்சிலர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் டி.எஸ்.பி-யிடம் விளக்கம் கேட்டுள்ளது. ராஜேஷ் குமாரும் பணம் பறிக்கும் நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்ய மனுதாக்கல் செய்துள்ளார். 

சமூக அளவில் தாழ்த்தப்பட்டோராக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் மக்களை பாதுகாக்க அரசு பல சட்டங்களையும், சலுகைகளையும் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்ற முழுமுயற்சி எடுத்து வரும் நிலையில், அச்சட்டத்தை துருப்புசீட்டாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்களின் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.