மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துக்கவீட்டில் பயங்கரம்: பிரீசர் பாக்சில் மின்சாரம் தாக்கி 15 பெண்கள் பாதிப்பு: துக்கத்தில் அழுதவர்களை பதறவைத்த மின்சாரம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, கக்கனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி உயிரிழந்தார். இவரின் மறைவை அறிந்த உறவினர்கள் சிறுமியின் வீட்டில் திரண்டு தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சிறுமியின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததாக தெரியவருகிறது.
இதில் சிறுமியின் உடலை பார்த்தவாறு குளிர்சாதன பெட்டியின் மீது படுத்தபடி அழுதுகொண்டிருந்த 15 பெண்களின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.