மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப மரணம்: நீச்சல் தெரியாமல் தந்தை கண்முன் நடந்த சோகம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார்.
சம்பவத்தன்று முத்து சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு சந்திரனின் 7 வயது மகன் விஷ்வாவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவன் விஷ்வா எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து இருக்கிறார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்க முயற்சித்தும் பலன் இல்லை.
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க இயலாது, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கிணற்றில் இருந்த நீரை 3 மணிநேரம் போராடி வெளியேற்றி சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர்.
கிணற்றருகே மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருந்த மகன், நீரில் விழுந்து பலியான துக்கம் தாளாது தந்தையும், அவரது குடும்பத்தினரும் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.