மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தில் உயிரிழந்தும் பலரின் வாழ்வுக்கு வழிவகை செய்த திருவண்ணாமலை இளைஞர்; அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், மாதுலம்பாடி, கணேசபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணன். இவரின் மகன் ஹரிஹரன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் விபத்தில் சிக்கி மரணடைந்தார். இளைஞரான அவரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட, உடல் உறுப்புக்கள் பெறப்பட்டன.
இதனையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஹரிஹரனின் வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஹரிஹரனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.