பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழக மக்களின் நிலைமையை பார்த்து, மிகுந்த வருத்தத்துடன் டைட்டானிக் ஜாக் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை பெருமளவில் தலைவிரித்தாடுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் சிறிதளவு தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அளவிற்கு மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பிபிசி நியூசில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை கண்ட உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் மற்றும் தி ரெவனனத் போன்ற படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து, மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். முற்றிலும் காலியாக உள்ள கிணறுகளை கொண்ட தண்ணீர் இல்லாத நகரம். தென்னிந்திய நகரமான சென்னையில் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்கள் முற்றிலும் வறண்டு போய் உள்ளது.
குடிநீருக்காக அரசு தரும் தண்ணீரைப் பெற மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கின்றனர். மேலும் தண்ணீர் பஞ்சத்தால் பல உணவகங்களும் தற்காலிகமாக மூடபட்டுள்ளது. மேலும் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க நகரத்தில் அதிகாரிகள் மாற்று நீராதார வழிகளை கண்டறிந்து வருகின்றனர். சென்னை வாழ்மக்கள் மழைக்காக பெருமளவில் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்று வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.