கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்திக்கிறார் அண்ணாமலை.!



TN BJP Annamalai Meet with Governor RN Ravi 

 

கள்ளக்குறிச்சியில் உள்ள கர்ணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விஷ சாராயம் அருந்திய 55 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, அதிமுக, தேமுதிக, அமமுக, பாஜக, பாமக, விசிக, நா.த.க, த.வெ.க, ம.நீ.ம உட்பட பல கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் அங்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அறிவித்தனர். 

இதையும் படிங்க: "குடிக்காதான்னு சொல்ல முடியாது" - கள்ளச்சாராய மரண விவகாரத்தில் கள்ளக்குறிச்சியில் கமல் பேட்டி.!

ரூ.10 இலட்சம் இழப்பீடு

தமிழ்நாடு அரசின் சார்பில் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி விஷசாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உட்பட 10 பேரை கைது செய்தனர். 

தமிழ்நாடு பாஜக தலைமை - ஆளுநர் சந்திப்பு

நேற்று முன்தினம் தமிழ்நாடு பாஜக சார்பில் மாநில அளவில் போராட்டமும் நடந்தது. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினர், தமிழ்நாடு ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து கள்ளச்சாராயண விவகாரம் மற்றும் தமிழ்நாட்டில் நிலமும் சட்டம்-ஒழுங்கு ரீதியான பிரச்சினை குறித்து வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
 

 

 

இதையும் படிங்க: கொண்டாட்டங்கள் வேண்டாம்.. உடனே இதை செய்யுங்க.! கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு.!