#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிமுக அரசியல் சலசலப்புக்கு நடுவே அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்பு!
நேற்று நடைபெற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கொரோனா பொது முடக்கம் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று பங்கேற்கவில்லை.
அதே நேரம் அவர் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 256 வது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக இருக்கும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.