மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி, கல்லூரிகள் நாளையும் விடுமுறை; தமிழ்நாடு அரசு அதிரடி., கொண்டாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.!
சொந்த ஊர் சென்ற மாணவர்கள் பொறுமையாக பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்பும் பொருட்டு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்.24 ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் தீபஒளி பண்டிகை வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபஒளி பண்டிகைக்கு அரசு சார்பில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று தீபஒளி திருநாள் கோலாகலமாக வரவேற்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றி வந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், அக். 25 ம் தேதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாளினை ஈடு செய்ய நவ. 19 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனால் சொந்த ஊர் சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் இன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.