திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: நாளை முதல் தமிழ்நாடு அரசுப்பேருந்துகள் ஓடாது.!
தமிழ்நாடு அரசு பேருந்து பணியாளர்கள் ஊதிய உயர்வு உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல காலமாக போராடி வருகின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற சமயத்தில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த போராட்டங்கள் ஆண்டாண்டுகளாய் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டிலும் அரசு போக்குவரத்து கழக சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க, அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தோல்வியில் முடிந்தது. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தங்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நாளை முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது என போக்குவரத்து சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நாளை முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் என்பது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெறும் எனினும், அவை நிறைவேற்றப்படாத வரை போராட்டம் தொடரும். போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை துயராகி இருக்கும் நிலையில், தற்காலிக்காக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் மூலமாக பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டு இருக்கிறது.