திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு பேருந்து பயணியா நீங்கள்?.. இனி உங்களின் பேருந்து இந்த உணவு நிறுத்தத்தில் மட்டுமே நிற்க வேண்டுமாம்.!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளில் தொலைதூரப்பேருந்துகள் இரவு உணவு இடைவெளிக்காக சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படும். இவ்வாறான உணவகங்கள் தரமற்று இருப்பதாகவும், சில நேரங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் தரமற்ற உணவகங்களில் நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.
இது தொடர்பான புகாரின் பேரில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் சாலையோர உணவகத்தில் நிறுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், நாகர்கோவில் மற்றும் செங்கோட்டை கன்னியாகுமரி போன்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகத்தில் மட்டும் நிறுத்தப்படலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல வேலூர், வேப்பம்பலி, சித்தூர் பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் சரவணபவன் உணவகத்தில் நிறுத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதனை மீறி வேறு ஏதேனும் உணவகத்தில் நிறுத்தப்பட்டால் 1800 5991 500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு விக்கிரமாண்டி, விழுப்புரம் வழியாக செல்லும் பேருந்துகள் ஹோட்டல் அரிஸ்டோவில் நிறுத்திக்கொள்ளலாம். பாண்டிச்சேரியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு வழியாக செல்லும் பேருந்துகள் ECR IN ஹோட்டலில் நிறுத்திக் கொள்ளலாம்.
தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் ரமேஷ் ஹோட்டலில் நிறுத்திக் கொள்ளலாம். பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் ஶ்ரீ ஆனந்த பவன் ஹோட்டலில் நிறுத்திக் கொள்ளலாம். சென்னையில் இருந்து வேலூர், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் JP ஹோட்டலில் நிறுத்திக்கொள்ளலாம்.