தமிழகத்தில் சொத்து, குடிநீர் வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு; ஜூன் 30 கடைசி தேதி!



tn govt extends 3 months to pay asset and water tax

ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் சொத்து, குடிநீர் வரி செலுத்த ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சொத்து, குடிநீர் வரியானது மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் வசூலிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களால் வரி செலுத்த முடியவில்லை.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் 30- ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்ட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கு தமிழக அரசு 3 மாதம் அவகாசம் கொடுத்துள்ளது.