மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடி அறிவிப்பு.. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தேதி நீட்டிப்பு.!
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பயின்று வரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை காலாண்டு விடுமுறை என்பது நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் அக்டோபர் மாதம் 03ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் காரணத்தால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளிகள் அக்.09ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்.03ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 2 கட்டமாக அக்.06ம் தேதி வரை ஆசியர்களுக்கு மாநில கல்வி ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பயிற்சி காரணமாக விடுமுறை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.