#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: மதுரை பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் - பரபரப்பு பேட்டி.. ஆளுநருக்கு செக்?..!
ஆளுநரின் விரும்பத்தகாத செயல்பாடு காரணமாக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
மதுரை பல்கலை.,யில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அடுத்தபடியாக சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் மூன்றாவது நபராக பேச ஆளுநர் அலுவலகம் திட்டமிட்டு இருந்ததாக தெரியவருகிறது. இந்த விசயத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பட்டமளிப்பு விழாவில் முதலில் வேந்தர், இணை வேந்தர், சிறப்பு பேச்சாளர் என்ற முறையில் இருக்க வேண்டும். இதில் கவுரவ விருந்தினர் என்ற நபர் தேவையில்லை. துறைக்கு சம்பந்தம் இல்லாத மத்திய இணை அமைச்சர் முருகனை ஆளுநர் இங்கு அழைப்பது ஏன்?.
பல்கலை.,யில் மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மதுரை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளமாட்டேன். ஆளுநரின் சர்ச்சை கருத்துக்கு டி.ஆர் பாலு பதில் தெரிவித்துவிட்டார். நான் வரலாறு படித்தவன். வரலாற்றை தெரிந்தவன் என்ற அடிப்படையில் ஆரியம் என்பது அலெக்ஸாண்டரின் வருகைக்கு பின்னர் தான் வருகிறது. ஆளுநர் திராவிட வரலாறை திரித்து கூற விரும்புகிறார். ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல.
மத்திய அரசால் தேர்வு செய்யப்படுவார். அவர் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றால், அவர் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசின் கொள்கையை வரவேற்க அதிகாரம் இல்லை. அவர் ஆளுநராக செயல்பட வேண்டும். ஆனால், அவரோ பாஜகவின் பிரசார பீரங்கிபோல செயல்படுகிறார். ஆளுநர் இந்தியாவின், திராவிட நாட்டின் வரலாறை படிக்க வேண்டும்" என்று பேசினார்.