ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் காரணமாக குழந்தை காதல் திருமணம் அதிகரிப்பு; ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!



TN Love Marriage Minor Age Due to Smartphone Use After Corona Lockdown 

 

தமிழகத்தை பொறுத்தமட்டில் குழந்தை திருமண முறை என்பதை அரசு தீவிரமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

குழந்தை திருமண விவகாரத்தில், சிறுமிகளை திருமணம் செய்யும் நபர், அவருக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர் ஆகியோரின் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்நிலையில், கொரோனாவுக்கு பின் தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது. குறிப்பாக சிறுமிகள் காதல் திருமணங்கள் அதிகரித்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளன. 

கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட நிலையில், சிறார்கள் அதனை படிப்பை தவிர பிற செயல்களுக்கு அதிகம் பயனப்டுத்த தொடங்கிவிட்டனர்.

இதில் 15 வயது முதல் 19 வயது வரையிலான சிறுமிகள், இளம்பெண்கள் காதல் வயப்பட்டு குழந்தை திருமணத்திற்கு உள்ளாகின்றனர். காதல் திருமணங்களில் 60% சிறார் செல்போன் காதல் திருமணமே என ஆய்வுகள் கூறுகின்றன.