மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க.. ஒரேநாளில் சரசரவென குறைந்தது தங்கத்தின் விலை.. உடனே போங்க அள்ளிட்டு வாங்க..!
இந்தியாவைப் பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி விலை நிலவரமானது தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஏறுமுகங்களை காணும் தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர்ந்து தற்போது 40,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இல்லத்தரசிகளிடையே இவை லேசான சோகத்தை ஏற்படுத்தினாலும், தங்கத்தின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து 22 கேரட் ஆபரண தங்கம் சென்னையில் சவரனுக்கு ரூ. 41,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2.50 காசுகள் குறைந்து ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.