53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#Breaking: காலையிலேயே நற்செய்தி.. தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரேநாளில் ரூ.800 குறைவு..! மிஸ் பண்ணாம உடனே போங்க..!!
கடந்த வாரத்திற்கு பின் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மளமளவென குறைந்தது.
உலகளவில் கொரோனா, உக்ரைன் போர் உட்பட பல காரணங்களால் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்தாலும், தங்கத்தின் விலை என்பது குறைந்தே இருக்கிறது.
ஆனால், இந்தியாவிலோ அதன் மீதான வரி உட்பட பல காரணங்களால் விலை விண்ணைமுட்டி செல்கிறது. கடந்த சில வாரமாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரம் வரை சென்றது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து, ரூ.5470 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.43760 க்கு விற்பனை செய்யபடுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.10 க்கும், கிலோ ரூ.74,700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே உயர்ந்த தங்கத்தின் விலை குறைந்துள்ளது இல்லதரிசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.