கடுமையாக வீழ்ச்சியடைந்த தக்காளியின் விலை: வருத்தத்தில் தமிழக விவசாயிகள்.!
கடந்த சில மாதமாகவே காய்கறி விலை என்பதை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவு உச்சமடைந்தது.
இந்நிலையில், தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்து இருப்பதால் கிலோ சராசரியாக 15 மற்றும் அதற்கு கீழ் என்ற நிலையில் இருக்கிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாகவே தக்காளியின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி விவசாயிகளிடையே சோகத்தை தந்துள்ளது.
கடந்த வாரத்தில் ரூபாய் 10 முதல் 15 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது கிலோவுக்கு ஆறு முதல் எட்டு ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் விளையும் தக்காளி தென்காசி, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் விலை வீழ்ச்சி காரணமாக தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வருத்தம் தெரிவிக்கும் விவசாயிகள், செய்வது என தெரியாமல் திகைத்து வருகின்றனர். மேலும், அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.