தக்காளி கிலோ 20 ரூபாய்., கடலூரில் அசத்தும் வியாபாரி..!



Tomato rupees 20 per kg in cuddalore

க்காளி விலையை கேட்டாலே தலை சுற்றும் அளவிற்கு தான் தற்போது இந்தியாவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி பெற்று வருகிறார்கள். தக்காளியே இல்லாமல் சமைக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். இன்னும் சிலர் தக்காளிக்கு பதில் புளியை பயன்படுத்தி சமைத்து வந்துள்ளனர். இவ்வாறு தக்காளியின் விலை 130 , 160 என்று உச்சத்தை தொட்டது.

இதனால் தமிழ்நாடு அரசு முன்வந்து மலிவு விடை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 60க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்ந்து பல ரேஷன் கடைகளில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வரத்து கம்மியானதால் இந்த விலை ஏற்றம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூரில் சில தினங்களாக ரூபாய்  92க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது மட்டும் இன்றி சாம்பார் வெங்காயம், இஞ்சி போன்ற இதர காய்கறிகளும் விலை ஏற்றம் ஆனது. இந்த நிலையில் கடலூரை சேர்ந்த சாலக்கரை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்கிற காய்கறி வியாபாரி ஒரு கிலோ தக்காளியை ரூபாய் இருபதுக்கு விற்பனை செய்ய செய்து வருகிறார். இதனால் அப்பகுதியின் இல்லத்தரசிகள் மிகவும் ஆச்சரியத்தில் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி செல்கிறார்கள்.

மேலும் இவர் ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி என்ற அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார். இந்த தகவல் பரவியதை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தக்காளி வாங்க குவிந்து கிடக்கிறார்கள். இது குறித்து வியாபாரி ராஜேஷ் பேசுகையில் வடமாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைந்த காரணத்தினால் விலை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் 50 கிராம் 100 கிராம் என்ற அளவிலே தக்காளியை பயன்படுத்தக்கூடிய நிலைக்கு வந்துள்ளனர்.

இதனால் வட மாநிலத்திலிருந்து ஒரு கிலோ அறுவது ரூபாய்க்கு தக்காளி வாங்கி கொண்டு இங்கு ரூ. 20 ரூபாய்க்கு சேவை நோக்கத்துடன் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று 600 கிலோ தக்காளி வாங்கி வந்த நிலையில் பொதுமக்கள் உடனே தீர்த்து விட்டார்கள். இதே போல் மற்ற வியாபாரிகளும் பொதுநலத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.